KC Arakattalai
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
நமது இணையத்தளம் மூலமாக பதிவு செய்யும் வரன்களுக்கு இந்திய அரசின் சட்டப்படி மணமகள் வயது 18 ஆகவும், மணமகன் வயது 21 ஆகவும் இருக்க வேண்டும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் ஜாதகங்களை பரிசீலிப்பதும், நன்கு விசாரணை செய்வதும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய கடமையும் உங்களை சார்ந்தது.
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் தவறுகள் மற்றும் குறைகள் இருப்பின் எந்தவிதத்திலும் எங்கள் அமைப்பு முழு பொறுப்பு ஏற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இணையதளத்தில் ஒருவரே பல கணக்குகளை வைத்திருந்தாலோ, போலியான மற்றும் தவறான சுயவிபரங்களை அளித்தாலோ எவ்விதமான முன்அறிவிப்பின்றி கணக்குகள் முடக்கப்படும்.
எங்கள் வலைதளத்தை வியாபார நோக்கில் பயன்படுத்த கூடாது.
வரன்களைப் பற்றிய தொடர்பு எண் மற்றும் விபரங்களை, எவ்வித காரணமும் இன்றி உறுப்பினர்களுக்கு தருவதற்கும், தராமல் இருப்பதற்கும் எங்களுக்கு முழு உரிமை உண்டு.
குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே எங்களால் இந்த சேவையை செய்ய இயலும்.
எவ்வித காரணங்களும் இன்றி எந்த ஒரு உறுப்பினரின் கணக்கை முடக்கவோ, நீக்கவோ எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த சேவையை இலவசமாகவே நீடித்து தரவேண்டும் என நிர்ப்பந்திக்க இயலாது.
எந்த வழியில் திருமணம் உறுதியானாலும் உடனடியாக உறுதியான தகவலை எங்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.