KC Arakattalai

KC Arakattalai

முக்கியமான செய்தி

இந்த சேவைக்காக நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. இதை ஒரு கட்டணமில்லா சேவையாக அனைத்து தமிழ் பேசும் செட்டியார்களுக்காக எங்களது அறக்கட்டளை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

எங்களைப் போல் மற்ற வழிகளிலும் வரன் தேடுவீர்கள். இறுதியில் ஏதாவது ஒரு வழியில் திருமணம் உறுதி செய்யப்படும். ஆனால் திருமணம் உறுதி ஆன தகவலை எங்களைப்போல் உள்ளவர்களுக்கு தெரிவிக்காமல் விட்டு விடுகிறீர்கள்.

அப்படியானவர்கள் எங்களிடம் பதிவு செய்து எங்களின் மதிப்பையும் எங்கள் பொன்னான நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். இந்த சேவைக்காக உங்களிடம் எதிர்பார்ப்பது திருமணம் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே.

எனவே அன்பார்ந்த உறவுகளே, எங்களின் அமைப்பை தேடி வரும் நீங்கள், அதே வேகத்துடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவேன் என உறுதியாக இருப்பவர்கள் மட்டுமே எங்கள் வலைதளத்தை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தகவல் தர விருப்பம் இல்லாதவர்கள் எங்களது வலைதளத்தை பயன்படுத்த வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  1. நமது இணையத்தளம் மூலமாக பதிவு செய்யும் வரன்களுக்கு இந்திய அரசின் சட்டப்படி மணமகள் வயது 18 ஆகவும், மணமகன் வயது 21 ஆகவும் இருக்க வேண்டும்.
  2. இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் ஜாதகங்களை பரிசீலிப்பதும், நன்கு விசாரணை செய்வதும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய கடமையும் உங்களை சார்ந்தது.
  3. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் தவறுகள் மற்றும் குறைகள் இருப்பின் எந்தவிதத்திலும் எங்கள் அமைப்பு முழு பொறுப்பு ஏற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
  4. இந்த இணையதளத்தில் ஒருவரே பல கணக்குகளை வைத்திருந்தாலோ, போலியான மற்றும் தவறான சுயவிபரங்களை அளித்தாலோ எவ்விதமான முன்அறிவிப்பின்றி கணக்குகள் முடக்கப்படும்.
  5. எங்கள் வலைதளத்தை வியாபார நோக்கில் பயன்படுத்த கூடாது.
  6. வரன்களைப் பற்றிய தொடர்பு எண் மற்றும் விபரங்களை, எவ்வித காரணமும் இன்றி உறுப்பினர்களுக்கு தருவதற்கும், தராமல் இருப்பதற்கும் எங்களுக்கு முழு உரிமை உண்டு.
  7. குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே எங்களால் இந்த சேவையை செய்ய இயலும்.
  8. எவ்வித காரணங்களும் இன்றி எந்த ஒரு உறுப்பினரின் கணக்கை முடக்கவோ, நீக்கவோ எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
  9. இந்த சேவையை இலவசமாகவே நீடித்து தரவேண்டும் என நிர்ப்பந்திக்க இயலாது.
  10. எந்த வழியில் திருமணம் உறுதியானாலும் உடனடியாக உறுதியான தகவலை எங்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
I accept terms and conditions